பஞ்சங்கத்தின் 27 யோகங்களும் 11 கரணங்களும்

பஞ்சங்கத்தின் 27 யோகங்களும் 11 கரணங்களும்


பஞ்சாங்கத்தின் நான்காவது அங்கம் யோகம் ஆகும். யோகம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள். யோகம் என்பது,  வான் மண்டலத்தில் சூரியன் மற்றும் சந்திரன் செல்லும் தூரத்தின் கூட்டுத்தொகை ஆகும். ஒரு யோகத்தின் அளவு 13° 20′ ஆகும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் “தின யோகம்”, “நித்திய யோகம்”, “சூரிய சித்தாந்த யோகம்” , “நாம யோகம் “ போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

யோகம் மற்றும் அதன் பலன் :

விஷ்கம்பம் — மனநடுக்கம்.
ப்ரீதி — பிரியம் .
ஆயுஷ்மான் — வாழ்நாள்.
சவுபாக்கியம் — புண்ணியம்.
சோபனம் — நலம்.
அதிகண்டம் — பெரிய கண்டங்கள்; 
சுகர்மம் — அறம். 
திருதி — துணை.
சூலம் — சில திசைப் பயண இடையூறுகள்.
கண்டம் — ஆபத்துக்கள். 
விருத்தி — ஆக்கம்.
துருவம் — ஸ்திரத்தன்மை பெறுதல்.
வியாகாதம் — பாம்பு முதலானவற்றால் ஆபத்து.
அரிசனம் — மகிழ்ச்சி.
வச்சிரம் — ஆயுதங்களால் தொல்லை
சித்தி — வல்லமை.
வியதீபாதம் — கொலை. 
வரியான் — காயம். 
பரிகம் — தாழ்வு. 
சிவம் — காட்சி.
சித்தம் — திறம்.
சாத்தியம் — புகழ்.
சுபம் — காவல்.
சுப்பிரம் — தெளிவு. 
பிராம்மம் — பிரமை. 
மாஹேத்திரம் — இந்திரனைப் பற்றிய அறிவு.
வைத்திருதி — பேய்களால் தொல்லை .

சுப யோகங்கள் :
ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரீயான், சிவம், சித்தம், சட்டக்தியம், சுயம், சுப்பிரமம், பிராம்யம், ஐந்திரம்

அசுப யோகங்கள் :

விஷ்கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், துருவம், வியாகாதம், வியதியாதம், பரிகம், வைதிருதி

யோகத்தில் பிறந்தவர் பலன்:

விஷ்கம்பம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

பகைவரை     எளிதில்   வெல்வர்,   காம   வேட்கை  மிக்கவர், தனது    விருப்படியே    நடப்பவர்.     நாற்கால்     பிராணிகள் உள்ளவர்     அல்லது      வாகனங்கள்     உடையவர்.

ப்ரீதி  யோகத்தில்  பிறந்தவர்கள்

அனைவருக்கும்     விருப்பமானவர்,            இனிமையாக பேசுபவர்,    பிறர்    மனை   நயப்பவர்,   தெய்வபக்தி, மற்றும் குரு பக்தி    உடையவர்

ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவர்கள்

புகழ்    உடையவர்,    சுகத்தை      விரும்புபவர், செல்வம்,      செல்வாக்கு       மிக்கவர்

சௌபாக்கியம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

மென்மையாக     பழகுபவர்,    காம    வேட்கை     மிகுந்தவர், செல்வந்தர்,    வெளியூர்,    வெளிநாடுகள்   சுற்றித்   திரிபவர்

சோபனம்  யோகத்தில் பிறந்தவர்கள்

சுகங்களை     விரும்பாதவர்,    சிறந்த   உணவு   வகைகளை உண்பவர்,     செல்வந்தர்,      உறுதியான    உடல்    அமைப்பு உடையவர்,     பண்டிதர்,      ஆசான்

அதிகண்டம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

கலைகளை    கற்றவர்,     வசீகரத்     தோற்றம்     உடையவர், காம    வேட்கை     மிக்கவர்,      செல்வந்தர்,         எப்போதும் சந்தோசத்தை     விரும்புபவர்

சுகர்மம்      யோகத்தில்    பிறந்தவர்கள்

நல்ல    குணங்கள்     உடையவர்,    சுகத்தை      விரும்புபவர், சிறந்த    உணவு    வகைகளை   உண்பவர், மனைவி, மக்கள் உடையவர்

திருதி யோகத்தில்   பிறந்தவர்கள்
                     
அழகன்,     அறிவாளி,      சொல்வாக்கும்,       செல்வாக்கும் மிகுந்தவர்,    நல்ல   குணங்கள்   உடையவர், காம வேட்கை மிகுந்தவர்

சூலம்   யோகத்தில்    பிறந்தவர்கள்

கோபம்      நிறைந்தவர்,      அழகன்,       காதுகளில்      நோய் உடையவர்,   காம    வேட்கை     நிறைந்தவர்,     உறுதியான உடல்       அமைப்பு       உடையவர்

கண்டம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

உணவு    வகைகளை    விரும்பி    உண்பவர்,    எதிர்காலம் பற்றி   அறிந்தவர்,    தோல்    வியாதி உடையவர், சுகவாசி, செல்வந்தர்,    வேத சாஸ்திரங்களை     அறிந்தவர்

விருத்தி  யோகத்தில்  பிறந்தவர்கள்

செல்வம்,    செல்வாக்கு    நிறைந்தவர்,   அறிவாளி,   கோபம் நிறைந்தவர்,    பணியாட்கள்     நிறைந்தவர்

துருவம் யோகத்தில்  பிறந்தவர்கள்

முயற்சி    உடையவர்,      பொறுமைசாலி,     சொல்வன்மை நிறைந்தவர்,     சளித்   தொந்தரவு    உடையவர், அனைவரையும்    அரவணைத்து   செல்லும்   மனப்போக்கு உடையவர்

வியாகாதம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

செல்வம்,    செல்வாக்கு   நிறைந்தவர்,     அறிவாளி,   மன உறுதி    உடையவர்,   கோபம்   நிறைந்தவர்,   குடும்ப பற்று உடையவர்,   நற்  குணம்    படைத்தவர்

ஹர்ஷணம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

அழகன்,    பிறர்   மனை    நயப்பவர்,           சந்தர்ப்பவாதி, செல்வம்,           செல்வாக்கு     உடையவர்

வஜ்ரம் யோகத்தில் பிறந்தவர்கள்

அழகன்,    செல்வம்,   செல்வாக்கு   உடையவர்.    பெண்கள் மேல்    விருப்பம்    உடையவர்,    வீரம்   நிறைந்தவர், பித்த நோய்    உடையவர்

சித்தி யோகத்தில் பிறந்தவர்கள்

அழகன்,     அறிவாளி,    மன    உறுதி    உடையவர்,     வெற்றி பெறுபவர்,     செல்வம்,      செல்வாக்கு     நிறைந்தவர்

வியதீபாதம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

முயற்சி    உடையவர்,     எதிரிகளை    எளிதில்     வெல்பவர், அழகன்,    சீதள    நோய்   உடையவர்   குளிர்ந்த  இடங்களை விரும்புபவர்

வரியன்  யோகத்தில்   பிறந்தவர்கள்

தனது    குலத்திற்கே      விரோதி,          மற்றவர்களின் பொருள்களை    அபகரிக்க     நினைப்பவர்,      பித்த நோய் உடையவர்,      செல்வம்    நிறைந்தவர்.

பரிகம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

தனது     விருப்பப்படியே    செயல்படுவார்.      விரோதத்தை எளிதில்   சம்பாதிப்பார்,           சொல்லிலும்,        செயலிலும் மாறுபாடு      உள்ளவர், செல்வம்     சேர்ப்பதில்    வல்லவர்

சிவம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

அறிவாளி,     பொறுமை    குணம்    படைத்தவர், பெரியோர்களையும்,    தெய்வங்களையும்    வணங்குபவர், செல்வந்தர்,    நல்ல    பணியாட்களை    உடையவர்

சித்தம்  யோகத்தில் பிறந்தவர்கள்

அறிவாளி,    திறமைசாலி,     அனைவராலும்     போற்றப் படுபவர்,   தர்ம    சிந்தனை    உடையவர்,    உணவுப் பிரியர்

சாத்யம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

பொறாமைத்    தன்மை   உடையவர்,   மந்திரங்கள்  கற்பவர், தெய்வ பக்தி   நிறைந்தவர்,     செல்வம்,   செல்வாக்கு நிறைந்தவர்

சுபம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

தர்மவான்,    பெண்களால் விரும்பப்படுபவர, எதிர்காலம்  பற்றி     அறிந்தவர்,      தன,         தானியங்கள் நிறைந்தவர்,     செல்வந்தர்

சுக்கிலம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

பிடிவாத    குணம்    உடையவர்,     தான்     என்ற      அகந்தை குணம்    உடையவர்,    காம    வேட்கை    நிறைந்தவர்,    ஒரு நிலையான     குணம்    இல்லாதவர்

பிரம்ஹம்  யோகத்தில் பிறந்தவர்கள்

அறிஞர்,    சுய  நலம்    மிகுந்தவர்,    பகுத்தறிவு  உடையவர், அனைவரையும்   கவரும்    ஆற்றல்     படைத்தவர், செல்வந்தர்

ஐந்திரம்   யோகத்தில்  பிறந்தவர்கள்

பிறர்க்கு    உதவும்    நோக்கு    உடையவர். வருங்காலத்தை உணர்ந்து   நடத்தல்,    அறிவாளி,    கோபம்   நிறைந்தவர், மற்றும்     செல்வந்தர்

வைதிருதி  யோகத்தில்  பிறந்தவர்கள்

செல்வம்,    செல்வாக்கு    நிறைந்தவர்,   அறிவாளி,   கோபம் நிறைந்தவர்,    பணியாட்கள்     நிறைந்தவர்

கரணம்

பஞ்சாங்கத்தில் ஐந்தாவது அங்கம் கரணம் ஆகும். கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவைக் குறிக்கும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும், இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும்.கரணம்மொத்தம் பதினொன்று.
கரணங்கள்மற்றும் அவற்றின் தேவதைகள்

  1. பவம் இந்திரன்
  2. பாலவம் நான்முகன்
  3. கௌலவம் மித்திரன்
  4. தைதுலை பித்ருக்கள்
  5. கரசை பூமி
  6. வணிசை ஸ்ரீதேவி
  7. பத்திரை யமன்
  8. சகுனி விஷ்ணு
  9. சதுஷ்பாதம் மணிபத்ரன்
  10. நாகவம் சர்ப்பம்
  11. கிம்ஸ்துக்னம் வாயு

கரணங்களை சர கரணம் ஸ்திர கரணம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

சர கரணம் ஸ்திர கரணம்

பவம் சகுனி
பாலவம் சதுஷ்பாதம்
கௌலவம் நாகவம்
தைதுலை கிம்ஸ்துக்னம்
கரசை
வணிசை
பத்திரை

அமாவாசையின் மறுநாள் வரக்கூடிய பிரதமையின் பிற்பாதியில் பவகரணம் ஆரம்பமாகும். துவிதியை திதிக்கு பாலவ, கௌலவ கரணங்களும் திருதியை திதிக்கு தைதுலை கரசை கரணங்களும் சதுர்த்தி திதியின் முற்பாதிக்கு வணிசை கரணமும் பஞ்சமி திதிக்கு மீண்டும் பவ, பாலவ கரணமும், இப்படியாக சுழற்சி முறையில் இந்த பவ, பாலவ, கௌலவ, தைதுலை, கரசை, வணிசை, பத்திரை ஆகிய 7கரணங்களும் வந்து கொண்டேயிருக்கும்.

மீதமிருக்கும் நான்கு கரணங்களான சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய கரணங்களில், சகுனி கரணம் தேய்பிறை சதுர்த்தசி திதியின் முற்பாதிக்கும், சதுஷ்பாதம் நாகவம் ஆகிய கரணங்கள் அமாவாசையில் முற்பாதிக்கும் பிற்பாதிக்கும், கிம்ஸ்துக்னம் கரணம் வளர்பிறை பிரதமை திதியின் முற்பாதிக்கும் வரும்.இந்த நான்கு கரணங்களும் இந்த ஒரு இடத்தில் மட்டுமே வரும், மற்ற 7 கரணங்களைப் போல சுழற்சி முறையில் இவைகள் வராது.

சுப கரணங்கள்:
பவம் ,பாலவம், கௌலவம், தைதுலை,கரசை ஆகியவை சுபகரணங்களாகும்.

அசுப கரணங்கள்:
வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம் , நாகவம் , கிம்ஸ்துக்னம் ஆகியவை அசுபகரணங்களாகும்.

மேலே காணப்படும் 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அவற்றிற்குரிய பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.

  1. பவ கரணம் (சிங்கம்)
    எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும்., சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.
  2. பாலவ கரணம் (புலி)
    சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் 
    குணமுடையவருமாவார்.
  3. கெளலவ கரணம் (பன்றி)
    அரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.
  4. தைதுலை கரணம் (கழுதை)
    தருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.
  5. கரசை கரணம் (யானை)
    அரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.
  6. வணிசை கரணம் (எருது)
    கற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும் ஆவர்.
  7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)
    ஆண்மைக்குறைவுள்ளவர் , மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.
  8. சகுனி கரணம் (காகம்)
    நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.
  9. சதுஷ்பாத கரணம் (நாய்)
    பெண் பிரியரும், வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபமுடையவர், தீய நடத்தையுடையவருமாவார்.
  10. நாகவ கரணம் (பாம்பு)
    துன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.
  11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)
    தாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.

இவைகள் கரணத்திற்குறிய பொதுவான பலன்களாக இருக்கும். தமிழ் பஞ்சாங்கம் மூலம் நீங்கள் அன்றன்றைய வாரம், திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் போன்றவற்றை அறியலாம் – https://www.astroved.com/tamil/today-panchangam-tamil/

Leave a comment