Tag: 12 rasi and natchathiram in tamil

How to Know Rasi Natchathiram Patham in Tamil

How to Know Rasi Natchathiram Patham in Tamil

ராசி மண்டலம்

வேத ஜோதிடம் எனப்படும் நமது பண்டைய ஜோதிட சாஸ்திரம், வான்வெளியையும், அதில் உள்ள நட்சத்திரம், கிரகம் போன்றவற்றின் அமைப்பு, இயக்கம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டது. விண்வெளியில் அமைந்துள்ள இந்த ராசி மண்டலம் என்பது, ஜோதிடத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

27 நட்சத்திரங்களைக் கொண்ட ராசி மண்டலம், 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் உள்ளன. எனவே, 27 நட்சத்திரங்கள், மொத்தம் 108 பாதங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ராசியும், 9 நட்சத்திரப் பாதங்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு, 12 ராசிகளுக்குள், 27 நட்சத்திரங்களும், அவற்றின் 108 பாதங்களும் முழுமையாக அடங்கியுள்ளன.

ஒருவர் பிறக்கும் நேரத்தில், அந்த இடத்தில் வானத்தில் அமைந்துள்ள 9 நவகிரகங்கள் அமைப்பைப் பொறுத்து, அவரது ஜாதகத்தில், இந்த 9 கிரகங்களும், 12 ராசிகளில் குறிக்கப்படுகின்றன.

இது போன்ற அமைப்பை முழுமையாகக் கருத்தில் கொண்டே, ஒருவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது. இதைப் படித்து ஆராய்ந்தே, எதிர்காலம், பலன்கள் போன்றவை அறிந்து சொல்லப்படுகின்றன.       

12 ராசிகள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். இந்த ஒவ்வொரு ராசியையும், ஒரு கிரகம், ராசி அதிபதியாக இருந்து ஆட்சி செய்கிறார். இந்த ராசிகள் ஒவ்வொன்றும், குறிப்பட்ட சில நட்சத்திரங்களையும், அவற்றின் பாதங்களையும் கொண்டதாக உள்ளன.   

இந்த அமைப்பு இவ்வாறு உள்ளது:

ராசி நட்சத்திர அமைப்பு

ராசிராசி அதிபதிநட்சத்திரம் பாதங்கள்
மேஷம்செவ்வாய்அசுவினி- 4 பாதங்கள், பரணி- 4 பாதங்கள், கிருத்திகை 1 ஆம் பாதம்
ரிஷபம்சுக்கிரன்கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள், மிருகசிரீஷம் 1, 2 ஆம் பாதங்கள்  
மிதுனம்புதன்மிருகசிரீஷம்- 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை- 4 பாதங்கள், புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் 
கடகம்சந்திரன்புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம்- 4 பாதங்கள், ஆயில்யம்- 4 பாதங்கள்
சிம்மம்சூரியன்மகம்- 4 பாதங்கள், பூரம்- 4 பாதங்கள், உத்திரம்- 1 ஆம் பாதம் 
கன்னிபுதன்உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம்சுக்கிரன்சித்திரை- 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி- 4 பாதங்கள், விசாகம்- 1, 2, 3 ஆம் பாதங்கள் 
விருச்சிகம்செவ்வாய்விசாகம்- 4 ஆம் பாதம், அனுஷம்- 4 பாதங்கள், கேட்டை- 4 பாதங்கள் 
தனுசுவியாழன் (குரு)மூலம்- 4 பாதங்கள், பூராடம்- 4 பாதங்கள், உத்திராடம்- 1 ஆம் பாதம் 
மகரம்சனிஉத்திராடம்- 2, 3, 4 -ஆம் பாதம், திருவோணம்- 4 பாதங்கள், அவிட்டம்- 1,  2-ஆம் பாதங்கள் 
கும்பம்சனிஅவிட்டம்- 3, 4 ஆம் பாதங்கள், சதயம்- 4 பாதங்கள், பூரட்டாதி- 1, 2, 3-ஆம் பாதங்கள்
மீனம்வியாழன் (குரு)பூரட்டாதி- 4 ஆம் பாதம், உத்திரட்டாதி- 4 பாதங்கள், ரேவதி- 4 பாதங்கள் 

சூரியன் இயக்கம்

ராசி மண்டலத்தைத் தொடர்ந்து சுற்றி வந்து கொண்டிருக்கும் சூரியன், ஒவ்வொரு ராசியிலும் 1 மாத காலம் பயணம் செய்கிறார். இவ்வாறு 12 ராசிகளில் பயணம் செய்ய அவருக்கு 1 வருட காலம் பிடிக்கிறது. இவ்வாறு, சூரியன் 1 ராசியில் தங்கியிருக்கும் காலம், 1 தமிழ் மாதமாகக் கணக்கிடப்படுகிறது. முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் பொழுது, புது தமிழ் வருடம் ஒன்று பிறக்கிறது. மேஷத்தில் அவர் இருக்கும் 1 மாத காலம், வருடத்தின் முதல் மாதமாகிய சித்திரை எனப்படுகிறது. இவ்வாறு, சூரியன் 12 ராசிகளில் இருக்கும் காலம், 12 தமிழ் மாதங்களாகின்றன. இவை – சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, அவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, மற்றும் பங்குனி ஆகும்.

சந்திரன் இயக்கம்       

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கும், அவர் இயக்கத்துக்கும் பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. 1 நட்சத்திரத்தில் பயணம் செய்ய இவர் சுமார் 1 நாளும், 1 ராசியில் பயணம் செய்ய சுமார் 2 ¼ நாளும் எடுத்துக் கொள்கிறார். இவ்வாறு 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் வழியாகப் பயணம் செய்து, ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர, சந்திரன் சுமார் 28 அல்லது 29 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது பிறக்கும் குழந்தைக்கு, அந்த நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரம் ஆகிறது. இது போலவே, சந்திரன் பயணித்துக் கொண்டிருக்கும் ராசியில் பிறக்கும் குழந்தைக்கு, அதுவே ஜன்ம ராசியாகிறது. இவ்வாறு ஒருவரது நட்சத்திரம், ராசி ஆகியவற்றை முடிவு செய்வது சந்திரன் தான் என்பதால், இவருக்கு ஜோதிடத்தில் பெரும் பங்கு உள்ளது.    

   

ராசி நட்சத்திரம் கண்டறிவது எப்படி?

ஒருவரது ராசி நட்சத்திரம் போன்றவற்றைக் கண்டறிவது இந்தக் கணினி யுகத்தில் எளிமையாகி விட்டது. கணினியில் அமைந்துள்ள ராசி கால்குலேட்டர் எனப்படும் எளிய அமைப்பு அல்லது சாதனத்தில், ஒருவரது பிறந்த மாதம், தேதி, வருடம், நேரம், இடம் ஆகியவற்றை பதிவு செய்வதன் மூலம், அவரது ராசி நட்சத்திரம் ஆகியவற்றை உடனடியாகப் பெற முடியும். தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இந்த வசதி உள்ளதால், ராசி நட்சத்திரம் என்றோ, அல்லது Rasi Natchathiram, Rasi Natchathiram in Tamil என்றோ தேடி, ராசி கால்குலேட்டரில் உரிய தகவல்களை அளித்து, ராசி நட்சத்திரம் போன்ற, தங்களது பல ஜோதிடத் தகவல்களை பலரும் தெரிந்து கொள்ளலாம்.